புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் மானும் - இவ்விரு சொற்களும் இரு வழியால் முடிதலே அன்றித் தொழிற்பெயர் போல உகரச் சாரியையும் பெற்றுப் புணரும் . புள்ளுக்கடிது, வள்ளுக்கடிது, நன்று , வலிது , எனவும் . புள்ளுக்கடுமை, வள்ளுக்கடுமை, நன்மை, வன்மை எனவும் வரும் . இது " லளவேற் றுமையிற் றடவும் " என்னும் சூத்திரத்தால் (சூ.227) எய்தியதன்மேல் சிறப்புவிதி.
|