உருபு புணரியல்

1. உருபுகள்

வேற்றுமை உருபுகள் வருவதற்குக் காரணமும் வரும் இடமும்

 
241பெயர்வழித் தம்பொரு டரவரு முருபே .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
உருபு- வேற்றுமை உருபுகள் , தம் பொருள் தர - தம் பொருளைக் கொடுக்க , பெயர்வழி வரும் - பெயர்க்குப் பின் வரும் .

நம்பி பெற்றான் , நம்பியைப் பெற்றான் , நம்பியாற் பெற்றான் என வரும் . மற்றவைகளும் இப்படியே .