| பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால் = பெண் தன்மையை விட்டு ஆண் தன்மையை அவாவுவனவாகிய பேடுகள் உயர்திணை ஆண்பாலாகும் . ஆண்மை விட்டு அல்லது அவாவுவ (பேடு) பெண்பால் = ஆண் தன்மையை விட்டுப் பெண் தன்மையை அவாவுவனவாகிய பேடுகள் உயர்திணைப் பெண்பாலாகும் , இருமையும் அஃறிணை அன்னவும் ஆகும் - இவ்விருவகைப் பேடுகளும் உயர்திணையாம் அன்றி அஃறிணையை ஒப்பனவும் ஆகும் . " பெண்ணவா யாணிந்த பேடி யணியாளோ - கண்ணவாத் தக்க கலம் " எனப் பெண் இலக்கணம் சிறந்தமையினாலே பெண்பால்பட்டது . ஆண்பால்பட்டதற்கும் , அஃறிணையை ஒத்து நின்றதற்கும் இலக்கியம் வந்தவழிக் காண்க .
|