|
பெயரியல் வேற்றுமை வேற்றுமையின் பெயரும் முறையும் |
|
292 | பெயரே ஐ ஆல் கு இன் அது கண் விளியென் றாகு மவற்றின் பெயர்முறை |
|
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை |
|
அவற்றின் பெயர் முறை - முன்னே எட்டு வேற்றுமை எனப் பட்டவைகளின் உடைய பெயர்களும் கிடக்கை முறையும் ஆவன்; பெயர் ஐ ஆல் கு இன் அது கண் விளி என்று ஆகும் = பெயரும் ஐயும் ஆலும் குவ்வும் இன்னும் அதுவும் கண்ணும் விளியும் என்று இப்படிச் சொல்லப்பட்டவை ஆகும். 35
|