பொதுப்பாயிரம்

ஆசிரிய ராகாதவர் இலக்கணம்

 
32பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றருஞ்
செய்தி கழற்பெய் குடத்தின் சீரே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
பெய்த முறை அன்றி - தன் உள்ளே போட்ட முறையினால் அன்றி , பிறழ உடன் தரும் செய்தி - முன் போடப்பட்டவையும் பின்போடப்பட்டவையும் அம்முறை பிறழ்ந்து போக விரைவிலே தன் உள்ளே கொண்ட கழற் காய்களைக் கொடுக்கும் செய்கை ஆனது , கழற் பெய்குடத்தின் சீர் - கழற்காய் போட்ட குடத்தினது குணமாம் .

தமக்குக் கற்பித்த முறையினால் அன்றி முன் கற்பிக்கப்பட்டவையும் பின் கற்பிக்கப்பட்டவையும் அம்முறை பிறழ்ந்து போக விரைவிலே தம் உடனே கொண்டநூல் பொருள்களைத் தரும்செய்கை ஆனது ஆசிரியர் ஆகாதவரது குற்றம் ஆதலால் கழற்குடம் அவருக்கு உவமானம் ஆயிற்று.