பெயர் வினையிடத்து = பெயரிடத்தும் வினை இடத்தும், ன ள ர ய ஈற்று அயல் ஆ ஓ ஆகலும் =னகர, ளகர, ரகர, யகர ஈற்றிற்கு அயலில் உள்ள விகுதிமுதல் ஆகாரம் ஓகாரம் அதலும், செய்யுளுள் உரித்து - செய்யுளிடத்து உரித்தாம். (வ-று) 1. "வில்லோன் காலன கழலே; " "தொடியோண் மெல்லடி மேலன சிலம்பே ;" " நல்லோர் யார் கொல்" "வரையாது கொடுத்தோய்" எனப் பெயரிடத்து ஆகாரம் ஓகாரமாயிற்று.2. "படைத்தோன் மன்றவப் பண்பிலாளன்;" "நல்லோண்மன்றகூப் பெயர்த்தோளே;" "சென்றோ ரன்பிலர்தோழி;" "வந்தோய் மன்ற தெண்கடற் சேர்ப்ப" என வினையிடத்து ஆகாரம் ஓகாரமாயிற்று.
வினையாலணையும் பெயரிடத்து அன்றி வினையிடத்தம் ஒரோவழி ஆஓவாகத் திரிந்து வருதலின, அதனையும் உடன் கூறினார். ஆவோவாகலும் என்ற உம்மையை ஆக்க உம்மையாகக் கொண்டு "பழமுதிர் சோலை மலைகிழவோனே" என ஒரோவழி அகரம் ஒகாரம் ஆதலும் கொள்க. 2
|