பெயரொடு பெயரும் = பெயர்ச் சொல்லோடு பெயர்ச் சொல்லும் , (பெயரொடு) வினையும் = பெயர்ச் சொல்லோடு வினைச்சொல்லும் , வேற்றுமை முதலிய பொருளின் = பின் சொல்லப்படும வேற்றுமை முதலாகிய அறுவகைப் பொருள் புணர்ச்சிக்கண், அவற்றின் உருபு இடை ஒழிய = அவற்றின் உருபுகள் நடுவிலே தொக்கு நிற்ப, இரண்டு முதலாத் தொடர்ந்து ஒருமொழிபோல் நடப்பன = இரண்டு சொற்கள் முதலாகப் பலசொற்கள் தொடர்ந்து ஒருசொல்போல நடப்பவை, தொகைநிலைத் தொடர்ச்சொல் = தொகைநிலைத் தொடர்ச் சொற்களாம். தொகை என்பது இங்கே உருபு மறைதல்.10
|