பெயர்ச்செவ்வெண் ஏ என்றா எனா எண் நான்கும் தொகை பெறும் = பெயர்களின் இடையே எண்ணிடைச்சொல் தொக்கு நிற்ப வரும் செவ்வெண்ணும் பெயரோடு தொகாது வரும் ஏகார எண்ணும் என்றா எண்ணும் எனா எண்ணும் ஆகிய நான்கு எண்களும் தொகையைப் பெற்று நடக்கும் , உம்மை என்று என ஓடு இந்நான்கு எண்ணும் = உம்மை எண்ணும் என்று எண்ணும் என எண்ணும் ஓடு எண்ணும் ஆகிய இந்த நான்கு எண்களும் , அஃது இன்றியும் இயலும் = அத்தொகை பெறாதும் நடக்கும் . 1. சாத்தன் கொற்றன் இருவரும் வந்தார் ; சாத்தனே கொற்றனே இருவரும் வந்தார் ; சாத்தனென்றா கொற்றனென்றா இருவரும் வந்தார் ;சாத்தனெனாக் கொற்றனெனா இருவரும் வந்தார். இவை தொகை பெற்றே வந்தன. இவை வழக்கிடத்து ஒரோவழித் தொகைபெறாது வரின் , இசை எச்சமாகவும் , செய்யுளிலே தொகை பெறாது வரின் தொகுத்தல் விகாரமாகவும் கொள்க. 2. சாத்தனும் கொற்றனும் இருவரும் வந்தார் ; சாத்தனென்று கொற்றனென்று இருவர் உளர் ; சாத்தனெனக் கொற்றனென . இருவருளர் ; சாத்தனோடு கொற்றனோடு இருவருளர் - இவை தொகை பெற்று வந்தன - சாத்தனும் கொற்றனும் வந்தார் ; நிலனென்று நீரென்று தீயென்று காற்றென்று அளவறு காயமென் றாகிய உலகம் ; நிலமென நீரெனத் தீயெனக் காற்றென அளவறு காயமென ஆகியவுலகம் ; நிலனோடு நீரோடு தீயோடு காற்றோடு அளவறு காயமோடு ஆகிய பூதம் - இவை தொகை பெறாது வந்தன. 9
|