பொது எழுத்தானும் - ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொழுவெழுத்தாலும் , சிறப்பு எழுத்தானும் - ஆரியத்திற்கே உரிய சிறப்பு எழுத்துத் திரிந்த எழுத்தாலும் ; ஈரெழுத்தானும் - இவ் இரண்டு எழுத்தினாலும் , இயைவன வட சொல் - செந்தமிழ்ச் சொல்லை ஒப்பனவாகி வடதிசையில் இருந்து செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவன வட சொல்லாம். 1. அமலம் , கமலம் , மேரு , காரணம் , காரியம் என்பன பொது எழுத்தால் இயைந்தன. 2. சுகி , போகி, சுத்தி என்பன சிறப்பெழுத்தால் இயைந்தன . 3. அரன் , அரி , கடினம் , சலம் என்பன ஈரெழுத்தாலும் இயைந்தன. 17
|