பொது இயல்பு ஆறையும் தோற்றி = பலவகை வினைகளுக்கும் பொது இலக்கணமாகிய செய்பவன் முதலிய ஆறையும் தோன்றச் செய்வது, பொருட்பெயர் முதல் அறுபெயர் = பொருட் பெயர் முதலிய அறுவகைப் பெயரையும் பயனிலையாக ஏற்பனவாகி, அலது ஏற்பு இல = மற்று ஒன்றையும் ஏலாதன, முற்று = முற்றுவினை வினைக்குறிப்புக்களாம். 1. தெரிநிலை வினைமுற்று:- செய்தான் அவன்.................பொருட்பெயர் கொண்டது. குளிர்ந்தது நிலம்.............இடப்பெயர் கொண்டது. வந்தது கார்.....................காலப்பெயர் கொண்டது. குவிந்தது கை..................சினைப்பெயர் கொண்டது. பரந்தது பசப்பு.................குணப்பெயர் கொண்டது. ஒழிந்தது பிறப்பு..............தொழிற்பெயர் கொண்டது. 2. குறிப்புவினை முற்று:- நல்லன் அவன் ..........................பொருட்பெயர் கொண்டது. நல்லது நிலம்....................இடப்பெயர் கொண்டது. நல்லது கார்.......................காலப்பெயர் கொண்டது. நல்லது கை........................சினைப்பெயர் கொண்டது. நல்லது பசப்பு...................குணப்பெயர் கொண்டது. நல்லது பிறப்பு..................தொழிற்பெயர் கொண்டது. மற்றைத் திணை பால் இடம் காலங்கள் தோறும் ஒட்டுக. 4
|