பொருள் முதல் ஆறு ஆம் அடைசேர் மொழி = பொருளாதி ஆறாகிய அடைகள் அடுத்து வரும் மொழிகள் ; இனம் உள்ளவும் இல்லவும் ஆம் = இனம் உள்ளவையேயாம் அன்றி இனம் இல்லாதவையும் ஆம்; இருவழக்கினும் = உலக வழிக்கின் உள்ளும் செய்யுள் வழக்கின் உள்ளும் . அடையினால் அடுக்கப்பட்டது அடைகொளி எனப்படும் . அடை எனினும் விசேடணம் எனினும் பொருந்தும் . அடைகொளி என்னும் விசேடியம் எனினும் பொருந்தும் , இனச்சுட்டுள்ள அடை பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம் எனவும் , இனச்சுட்டில்லா அடை தன்னோடு இயைபின்னமை நிக்கிய விசேடணம் எனவும் பெயர் பெறும் .
இனம் உள்ளன | இனம் இல்லன | நெய்க்குடம் | உப்பளம் ..........பொருள் . | குளநெல் ஊர்மன்று ........இடம் . | கார்த்திகைவிளக்கு | நாளரும்பு....... காலம் . | பூமரம் | இலைமரம் ............ சினை | செந்தாமரை | செம்போத்து ........ குணம் | ஆடுபாம்பு | தோய்தயிர்.........தொழில் | |
என வழக்கு இடத்து வந்தன . அளம் எனவே உப்பு என்பதும் , மன்று எனவே ஊர் என்பதும் , அரும்பு எனவே நாள் என்பதும் , மரம் எனவே இலை என்பதும் , போத்து எனவே செம்மை என்பதும் தயிர் எனவே தோய்தல் என்பதும் தாமேவந்து இயைதலால் , அளம் முதலியன அடை இன்றியும் இப்பொருளாள் ஆறையும் உணர்த்தும். உப்பில்லா அளமும் , ஊரில்லா மன்றும் , நாள் இல்லா அரும்பும் , இலையில்லா மரமும் , செம்மையில்லாப் போத்தும் , தோய்தல் இல்லாத் தயிரும் இல்லை ஆதலால் , இவை இனம் மில்லன ஆயின, இனி முற்கூறிய நெய்க்குடம் முதலிய இனம் உள்ளனவற்றை அடை கொடாது கூறில் குறித்தபொருள் விளங்காமல் பொதுமையின் நிற்கும் ஆதலால் , அவற்றிற்கு அடைகொடுத்துக் கூறுதலே மரபாயிற்று . இனிச் செய்யுள்வழக்கில் வருமாறு : - ' பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் ' பொருள் . ' கான்யாற்றடைகரை ' - இடம் . ' முந்நாட் பிறையின் முனியாது வளர்ந்தது ' - காலம் . ' காலவமா விமயிலெருத்திற் கடிமல ரழ்ந்தன காயா ' - சினை . " சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியாங் கிவள் " - குணம் . "ஆடர வாட வாடும் அம்பலத் தமிர்தே " - தொழில் . இவை இன முள்ளன . "பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே - " பொருள் . " வடவேங்கடந் தொன்குமரி " - இடம் " வேனிற் கொங்கின் பூம்பொகுட் டன்ன " - காலம் . " சிறகர் வண்டு செல்வழி பாட " - சினை . " செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் " - குணம் " முழங்கு கடலோத மூழ்கிப் போக " - தொழில் . இவை இனம் இல்லன . இனம் உள்ளனவற்றை அடை கொடுத்துக் கூறுதல் வழாநிலையும் . இனம் இல்லைனவற்றை அடை கொடுத்துக் கூறுதல் வழுவமைதியுமாம் என்க 50
|