எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள் தரின் பதம் ஆம் - எழுத்துக்கள் தாமே ஒவ்வொன்றாகத் தனித்தும் இரண்டு முதலாகத் தொடர்ந்தும் பிற பொருளைத் தருமாயின் அது பதமாம் , அது பகாப்தம் (என) பகுபதம் என இருபாலாகி இயலும் - அப் பதம் பகாப்பதம் எனவும் பகுபதமெனவும் இரண்டு வகையினை உடையதாகி நடக்கும் , என்ப - என்று சொல்லுவர் புலவர் . *(அ.கு) இவ் இயல் வடமொழி இலக்கணத்தையும் தழுவிச் செல்கின்றமையால் , பதம் என்னும் வடமொழியை முற்கூட்டிப் பதவியல் எனப் பெயரிட்டனர் போலும்.
|