எண்மூவெழுத்து ஈற்றுஎவ்வகை மொழிக்கு முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பும் - இயல்பினால் ஆயினும் விதியினால் ஆயினும் இருபத்துநான்கு எழுத்தையும் ஈறாகவுடைய பெயர்ச்சொல் , வினைச்சொல் , இடைச்சொல் , உரிச்சொல் , திசைச்சொல் , வடசொல் என்னும் பலவகைப்பட்ட சொற்களுக்கும் முன்னே வரும் ஞகர , நகர , மகர , யகர , வகரங்கள் அல்வழி , வேற்றுமை இரண்டிலும் இயல்பாதலும் , குறில் வழி ய தனி ஐ நொ து முன் மெலி மிகலும் ஆம் :- குற்றொழுத்தின் பின்னின்ற யகர மெய்யே ஓரெழுத்தொருமொழியாகிய உயிர் உயிர்மெய் என்னும் ஐகாரமே நொவ்வே துவ்வே என்பவைகளுக்கு முன் வரும் ஞகார , நகார , மகாரங்கள் பிற சொற்களின் முன் இயல்பாதல் அன்றி மிக்கு முடிதலும் ஆகும் , ண ள ன ல வழி ந திரியும் - ண , ள , ன , லக்களின் முன் வரும் நகரம் பிற ஈற்றின் முன் இயல்பாதலன்றித் திரியும் . விதி ஈறாவது இயல்பாக நின்ற உயிரேனும் ஒற்றேனும் போய் மற்றோர் உயிர் ஈறாகவேனும் ஒற்று ஈறாகவேனும் நிற்பது . புணரியலில் அல்வழி வேற்றுமைகளுள் ஒன்றைக் குறிப்பாகவேனும் வெளிப்படையாகவேனும் விதவாத இடமெல்லாம் அவ் இரண்டையும் கொள்க . 1. விள , பலா புளி , தீ , கடு , பூ , சே , பனை , கோ , கௌ , உரிஞ் , மண் ,பொருந் , மரம் , பொன் , வேய் , வேர் , வேல் , தெவ் , யாழ் , வாள் , எஃகு என்னும் நிலை மொழி , களோடு , அல்வழிப் புணர்சிக்கு உதாரணமாக , ஞான்றது , நீண்டது, மாண்டது , யாது , வலிது என்னும் வருமொழிகளையும் , வேற்றுமைப் புணர்ச்சிக்கு உதாரணமாக , ஞாற்சி , நீட்சி , மாட்சி , யாப்பு , வன்மை என்னும் வருமொழிகளையும் கூட்டி , அல்வழி | வேற்றுமை | விள ஞான்றது | விள ஞாற்சி | விள நீண்டது | விள நீட்சி | விளமாண்டது | விள மாட்சி | விள யாது | விள யாப்பு | விள வலிது | விள வன்மை |
என எல்லா ஈற்றின் முன்னும் ஞ , ந , ம , ய , வக்கள் இயல்பாதல் காண்க . உரிஞ் + ஞான்றது = உரிஞுஞான்றது , பொருந் + ஞான்றது = பொருஞுஞான்றது , வேல் + ஞான்றது = வேன்ஞான்றது , வாள் + ஞான்றது = வாண் ஞான்றது , மரம் + ஞான்றது = மரஞான்றது என நிலைமொழி ஈறுகள் விகாரப்படுதல் அவ்வவ் ஈற்றுச் சிறப்பு விதிகளில் காண்க . | அல்வழி | வேற்றுமை | 2. | மெய்ஞ் ஞான்றது | மெய்ஞ் ஞாற்சி | | மெய்ந் நீண்டது | மெய்ந் நீட்சி | | மெய்ம் மாண்டது | மெய்ம் மாட்சி | | கைஞ் ஞான்றது | கைஞ் ஞாற்சி | | கைந் நீண்டது | கைந் நீட்சி | | கைம் மாண்டது | கைம் மாட்சி |
எனக் குறில் முன்னின்ற யகரத்தின் முன்னும் தனி ஐம் முன்னும் மெலி மிகுதல் காண்க . 3. நொ , து , முன் மெலி மிகலுமாம் என்ற எச்ச உம்மையால் , அவ் விரண்டன் முன்னும் இடை எழுத்து மிகலுமாம் என்றாராயிற்று . நொ + ஞெள்ளா = நொஞ்ஞெள்ளா | து + ஞெள்ளா = துஞ்ஞெள்ளா | நொ + நாகா = நொந்நாகா | து + நாகா = துந்நாகா | நொ + மாடா = நொம்மாடா | து +மாடா = தும்மாடா | நொ + யவனா = நொய்யவனா | து + யவனா = துய்யவனா | நொ + வளவா = நொவ்வளவா | து + வளவா= துவ்வளவா |
இவை வினைச்சொற்கள் ஆதலால் , அல்வழியிலே மிகுந்தன . 4. ண , ள , ன , ல வழி நத் திரியும் என்றது பின் வரும் " ன ல முன் ற ன வும் " என்னம் சூத்திரத்திலே காண்க . இச் சூத்திரம் முதலியன , ஒன்றற்கொன்று தொடர்ச்சியாகப் புணர்த்தலால் , தொடர்ச் சொற் புணர்த்தல் என்னும் உத்தி .
|