எட்டன் உடம்பு - இறுதி உயிர்மெய் கெட நின்ற எட்டு என்னும் எண்ணினது டகர மெய் , ண ஆகும் என்ப - நாற்கணமும் வர ணகர மெய்யாகத் திரியும் என்று சொல்லுவர் புலவர்.
எண்பது, எண்கழஞ்சு, எண்கலம், எண்குணம் எனவும், எண்ணாழி எனவும், எண்வகை எனவும், எண்ணைந்து எனவும் வரும் .