உருபு புணரியல்

உருபு புணர்ச்சிக்குச் சிறப்பு விதி

 
245எல்லா மென்ய திழிதிணை யாயின்
அற்றோ டுருபின் மேலும் முறுமே
அன்றே னம்மிடை யடைந்தற் றாகும் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
எல்லாம் என்பது = எல்லாம் என்னும் பொதுப் பெயர் , இழிதிணை ஆயின் (இடை) அற்று உருபின் மேல் உம் உறும் = அஃறிணையில் வரும்போது அதனோடு ஆறு உருபுகளும் புணரின் இடையிலே அற்றுச் சாரியையும் உருபின் மேல் முற்றும்மையும் பெறும் , அன்றேல் இடை நம் அடைந்து அற்று ஆகும் - உயர் திணையில் வரும்போது இடையிலே நம்முச் சாரியை அடைந்து உருபின்மேல் முற்றும்மையும் பெறும் .

எல்லாவற்றையும் , எல்லா நம்மையும் என வரும் . மற்றை உருபுகளோடும் இப்படியே ஒட்டுக. எல்லாநம்மையும் = உயர்திணைத் தன்மைப் பன்மை . இனி , இரட்டுற மொழிதலால் , இழிதிணையாய் இன் அற்றோடு எனக்கொண்டு , எல்லாவற்றனையும் என வருதலும் கொள்க .