எட்டன் உருபு = எட்டாம் வேற்றுமையின் உருபுகளாவன , எய்து பெயர் ஈற்றின் திரிபு = விளி அடைந்த பெயர் ஈற்றினுடைய திரிதலும் , குன்றல் = கெடுதலும் , மிகுதல் = மிகுதலும் , இயல்பு = இயல்பாதலும் , அயற்றிரிபும் ஆம் - ஈற்று அயலெழுத்துத் திரிதலுமாகும் , பொருள் படர்க்கையோரைத் தன்முகம் ஆக அழைப்பது - அவற்றின் பொருளாவது படர்க்கைப் பெயர்ப் பொருளைத் தனக்கு எதிர்முகமாக அழைப்பதால் ஆகிய விளிக்கப்படு பொருளாம். தான் அசைநிலை , விளித்தற்குக் கருவி ஆகிய உருபை விளி என்றது காரிய ஆகுபெயர் .
|