வினையியல்

ஒழிபு
பால் பொதுவினை

 
350எவனென் வினாவினைக் குறிப்பிழி யிருபால்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
வினா எவன் என் வினைக்குறிப்பு = வினாப்பொருளைத் தரும் எவன் என்னும் வினைக்குறிப்பு முற்று , இழி இருபால் - அஃறிணை இருபாலுக்கும் பொது வினையாம் .

அஃதெவன், அவை யெவன் என வரும். எவன் என்பது, என் , என்ன , என்னை என விகாரப்பட்டும் வரும். இங்கே சொன்ன எவன் என்பது, உயர்திணை ஆண்பாலை உணர்த்தும் எவன் என்பது அன்று.

31