எச்சப் பெயர்வினை = உருபுகளும் முற்றுக்களும் பெயரெச்சங்களும் வினையெச்சங்களும் கொண்டு முடியும் எச்சமாகிய பெயரும் வினையும் , ஈற்றினும் எய்தும் = அவற்றிற்கு ஈற்றிலும் வரும். ஈற்றினும் என்ற உம்மையால், முதலினும் வருதல் கொள்க.
ஈறு | முதல் | | சாத்தன் வந்தான் | வந்தான் சாத்தான் | உருபுகளின் எச்சங்கள் ஈரிடத்தும் வந்தன | மரத்தைக் குறைத்தான் | குறைத்தான் மரத்தை | சாத்தனால் வந்தான் | வந்தான் சாத்தனால் | சாத்தனுக்குக் கொடுத்தான் | கொடுத்தான் சாத்தனுக்கு | சாத்தனின் நிங்கினான் | நீங்கினான் சாத்தனின் | சாத்தனது ஆடை | --------------- | சாத்தனகண் சென்றான் | சென்றான் சாத்தான்கண் | சாத்தா வா | வா சாத்தா | வந்தான் சாத்தான் | சாத்தான் வந்தான் | முற்றெச்சங்களின் எச்சங்கள் ஈரிடத்தும் வந்தன. | வந்த சாத்தான் | ------------ | வந்து போயினான் | போயினான் வந்து |
எய்துமீற்றின் என்றாற்போல முதற்கண் வருதலை எடுத்து ஓதாது உம்மையால் தழுவிக்கோண்டார். ஆறன் உருபின் எச்சமும் ஏழன் உருபின் எச்சப்பெயரும் பெயரெச்சத்தின் எச்சமும் முதற்கண் வாரா என்பதும், ஒழிந்தன முதற்கண் வரினும் இறுதிக்கண் வருதல்போல் சிறப்பின அல்ல என்பதும் தோன்றுதற்கு என்க. எழுவாய் உருபு வினைமுற்றுப் பயனிலையை இறுதியிலே கொண்டதும், வினைமுற்றுப் பெயர்ப் பயனிலையை முதலிலே கொண்டதும், சாத்தான் வந்தான் என வரும். தம்முள் வேற்றுமை யாதோ எனின், கேட்போர்க்குச் சாத்தன் இது செய்தான் என வினையை உணர்த்தும்போது, சாத்தன் என்னும் எழுவாய்க்கு வந்தான் என்னும் முற்றுவினை பயனிலையாகக் கொள்ளப்படும்; இது செய்தான் சாத்தான் என வினை முதலை உணர்த்தும்போது, வந்தான் என்னும் முற்றுவினைக்குச் சாத்தன் என்னும் பெயர் பயனிலையாகக் கொள்ளப்படும். வந்தான் சாத்தான் என்றும் முற்றுத் தொடருக்கும் இவ்வாறு அறிக. 6
|