எழுவாய் இறுதி நிலை மொழி = செய்யுள் முதலிலும் இறுதியிலும் நிற்கும் மொழிகள் , தம்முள் பொருள் நோக்கு உடையது = தம்முள்ளே பொருளை நோக்குதலுடைய பொருள்கோள் , பூட்டுவில் ஆகும் = பூட்டுவில் பொருள்கோளாம். " திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாத ரிறந்து படிற்பெரிதா மேத - முறந்தையர்கோன் றண்ணார மார்பிற் றமிழர் பெரு மானைக் கண்ணாரக் காணக் கதவு" இதிலே, திறந்திடுமின் கதவு என நோக்கிற்று.64
|