எதிர்மறை = எதிர்மறையும் , சிறப்பு = சிறப்பும் , ஐயம் = ஐயமும் ; எச்சம் = எச்சமும் , முற்று = முற்றும் , அளவை = எண்ணும் , தெரிநிலை = தெரிநிலையும் , ஆக்கம் = ஆக்கமும் ஆகிய , எட்டு உம்மை = எட்டுப் பொருளையும் தரும் உம்மை இடைச்சொல் . எச்சம் இறந்த்து தழீஇய எச்சமும் , எதிரது தழீஇய எச்சமும் என இருவகைப்படும் . 1. " மறப்பினும் ஓத்துக் கொளலாகும் ' - இங்கே மறக்கல் ஆகாது என்னும் பொருளைத் தருதலால் எதிர்மறை. 2. " குறவரும் மருளுங் குன்றம் " - இங்கே குன்றின் உயர்வைச் சிறப்பித்தலால் உயர்வுசிறப்பு. " புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை. " இங்கே உடம்பின் இழிவைச் சிறப்பித்தலால் இழிவுசிறப்பு . 3. அவன் வெல்லினும் வெல்லும் - இங்கே துணியாமையை உணர்த்தலால் ஐயம் . 4. சாத்தனும் வந்தான் - இங்கே கொற்றன் வந்தது அன்றி என்னும் பொருளைத் தந்தால் இறந்தது தழீஇயவெச்சம் ; இனிக்கொற்றனும் வருவான் என்னும் பொருளைத் தந்தால் எதிரது தழீஇய எச்சம் . 5. எல்லாரும் வந்தார் - இங்கே எஞ்சாப் பொருளைத் தருதலால் முற்று. 6. இராவும் பகலும் - இங்கே எண்ணுதற்கண் வருதலால் எண். 7. ஆணுமன்று பெண்ணுமன்று - இங்கே இன்னது எனத் தெரிவித்து நிற்றலால் தெரிநிலை. 8. பாலுமாயிற்று - இங்கே அதுவே மருந்தும் ஆயிற்று என்னும் பொருளைத் தருதலால் ஆக்கம் . 6
|