என்றும் எனவும் ஒடுவும் = என்று, என, ஒடு என்னும் இம்மூன்று இடைச் சொற்களும் ,= ஒரோவழி நின்றும் பிரிந்து எண்பொருடொறும் நேரும் = எண்ணப்படும் பொருள் தோறும் நிற்றலே அன்றி ஓரிடத்து நின்றும் பிரிந்து எண்ணப்படும் பொருள் தோறும் சென்று பொருந்தும். 1. " வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும் " - இங்கே என்றென்பது, வினையென்று பகை என்று என நின்றவிடத்துப் பிரிந்து, பிற வழியும் சென்று பொருந்தியது. 2. " பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாவா மில்லிறப்பான் கண் " - இங்கே என என்பது, பகை எனப் பாவம் என அச்சம் எனப் பழி என , என்று நின்ற இடத்துப் பிரிந்து பிறவழியும் சென்று பொருந்தியது. 3. " பொருள் கருவி காலம் வினையிடனோடைந்து மிருடீர வெண்ணிச் செயல்; " - இங்கே ஒடு என்பது, பொருளொடு கருவி யொடு காலத்தொடு வினையொடு இடனொடு என நின்ற இடத்துப் பிரிந்து, பிற வழியும் சென்று பொருந்தியது. 10
|