|
| எழுத்தியல் பிறப்பு பிறப்புக்குப் புறனடை | | 88 | எடுத்தல் படுத்த னலித லுழப்பிற் றிரிபுந் தத்தமிற் சிறிதுள வாகும். | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | (பல எழுத்திற்குப் பிறப்பு ஒன்றாகச் சொல்லப்பட்டன எனினும்) எடுத்தல் - உயர்த்திக் கூறுதலும் , படுத்தல் - தாழ்த்திக் கூறுதலும் , நலிதல் - உயர்த்தியும் தாழ்த்தியும் கூறுதலும் ஆகிய , உழப்பின் - எழுத்திற்குரிய ஒலி முயற்சியால், திரிபும் தத்தமின் சிறிது உள ஆகும் - ஒன்றற்கு ஒன்று பிறப்பு வேறுபாடுகளும் அவ்வவற்றின் கண்ணே சிறிது சிறிது உள்ளனவாம் .
|
|