பொதுவியல்

தொகைநிலைத் தொடர்மொழி
உவம உருபுகள்

 
367போலப் புரைய வொப்ப வுறழ
மானக் கடுப்ப வியைய வேய்ப்ப
நேர நிகர வன்ன வின்ன
என்பவும் பிறவு முவமத் துருபே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
போல.... நிகர - இப்போல முதலாகிய செய என் எச்சம் பத்தும் , அன்ன இன்ன என்பவும் = அன்ன இன்ன என்னும் பெரெச்சம் குறிப்பிரண்டும் , பிறவும் - இவை போல்வன பிறவும் , உவமத்துருபு - உவம உருபுகளாம்.

பிற என்றதனால், போல், புரை என்றல் தொடக்கத்து வினையடியால் பிறத்தற்கு உரிய மற்றை வினையெச்ச விகற்பங்களும், பெயரெச்ச விகற்பங்களும், பொருவ, ஏற்ப, அனைய, இகல, எதிர, சிவண, மலைய முதலானவையும் கொள்க

16