எழுத்தியல்

இடைநிலை மயக்கம்
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்குச் சிறப்பு விதி

 
115மம்முன் ப ய வ மயங்கு மென்ப.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
மம் முன் ப ய வ மயங்கும் என்ப - மகரத்தின் முன் ப, ய, வ என்னும் மூன்று மெய்களும் மயங்கும் என்று சொல்லுவர் புலவர் .

கம்பன் , கலம் யாது , கலம் வலிது
என வரும் .