அஃறிணைப் பெயரின் இறுதி மகரம் - பால்பகா அஃறிணைப் பெயர்களிடத்து ஈற்றிலே நின்ற மகர மெய் , னகரமோடு உறழா நடப்பன உள - னகர மெய்யோடு ஒத்து நடப்பவை உண்டு. மகரம் னகரத்தோடு ஒத்தலாவது , பெயரின் இறுதியிலே மகரம் நின்றஇடத்து னகரம் வந்து நிற்பினும் வேற்றுமை இன்றி ஒத்தலாம். இம் மகரம் குறிலிணைக் கீழ் மகரம் என்று அறிக. அகம்-அகன், நிலம்-நிலன் என வரும். இவ் இறுதிப்போலியை முற் கூறியதனால் சுரும்பு-சுரும்பர், வண்டு-வண்டர் என மென்தொடர்க் குற்றியலுகரப் பெயர் இறுதி உகரம் அன்பு என்பதனோடு ஒத்து வருதலும். பந்தல்-பந்தர், சாம்பல்-சாம்பர் எனச் சில லகர மெய் ஈற்றுப் பெயரின் இறுதி லகர மெய் ரகர மெய்யோடு ஒத்து வருதலும் கொள்க.
|