மரப் பெயர் முன்னர் - உயிரீற்றுச் சில மரப் பெயர்களுக்கு முன் , இன மெல்லெழுத்து வரப் பெறுனவும் உள - மேற்கூறிய பொது விதியால் வரும் வல்லெழுத்து மிகாது அவற்றிற்கு இனமாகிய மெல்லெழுத்து மிகப்பெறு வனவும் சில உளவாம் , வேற்றுமை வழி - வேற்றுமை வழியில் . (உ-ம்) விள + காய் = விளங்காய் , கள + கனி = களங்கனி , மா + துளிர் = மாந்துளிர் , காயா + பூ = காயாம்பூ என வரும் . இது "இயல்பினும் விதியினும்" (சூ.165) என்னும் சூத்திரத்தால் எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிது விதி வகுத்தல் .
|