மக்கள் தேவர் நரகர் உயர்திணை = மக்களும் தேவரும் நரகரும் உயர்திணையாகும் , மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை = அவரை ஒழிந்த விலங்கு முதலாகிய உயிருள்ளவையும் நிலம் , நீர் முதலாகிய உயிர் இல்லாதவையும் அஃறிணையாகும் . இம் மூவகையோருடைய உடம்பையும் உயிரையும் வேறாகக் குறிக்கும்போது , அவையும் அஃறிணையாம். திணை-சாதி ; உயர்திணை = உயர்வாகிய சாதி ; அஃறிணை = உயர்வு அல்லாத சாதி .
|