மன் = மன் என்னும் இடைச்சொல் , அசைநிலை = அசைந்து நிற்றல் பொருளிலும் , ஆக்கம் = ஆக்கப்பொருளிலும் , கழிவு = கழிதல் பொருளிலும் , மிகுதி = மிகுதிப் பொருளிலும் , நிலைபேறு ஆகும் = நிலைபெறுதல் பொருளிலும் வரும். 1. " அதுமன் கொண்கன் தேரே " - இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசைநிலை. 2. " கூரியதோர் வாள் மன் " - இங்கே இரும்பை அறத்துணித்தது என்னும் ஒழிந்த சொற்களைத் = தருதலால் ஒழியிசை. 3. " பண்டு காடுமன் " - இங்கே இன்று வயல் ஆயிற்று என்னும் ஆக்கப் பொருளைத் தருதலால் ஆக்கம். 4. "சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே " - இங்கே இப்பொழுது அவன் இறந்ததனால் எமக்குக் கொடுத்தல் கழிந்தது என்னும் பொருளைத் தருதலால் கழிவு. 5. " எந்தை எமக்கு அருளுமன் " - இங்கே மிகுதியும் அருளுவன் என்னும் பொருளைத் தருதலால் மிகுதி. 6. " மன்னா வுலகத்து மன்னியது புரிமோ " -இங்கே இவ் இடைச்சொல் அடியாகப்பிறந்த வினைகள் நிலைபெறாத உலகத்திலே நிலைத்ததைச் செய் , என்னும் பொருள்பட நிற்றலால் நிலைபேறு. 13
|