இடையியல்

முன்னதற்கு ஓர் புறனடை

 
434மற்றைய தென்பது சுட்டிய தற்கினம்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
மற்றையது என்பது = மற்றையது என்னும் பொருளாகிய வினைமாற்றும் பிறிதும் , சுட்டியதற்கு இனம் = கருதியதற்கு இனமாகிய மறுதலை வினையும் இனமாகிய பிறிதுமாம்.

முன் உதாரணங்களுள், நல்வினையை விரைந்து அறிவாம் எனக் கருதியதற்கு இனமாகிய வினைமாற்று ஆவது, விரையாது அறிவாம் என்பது; ஊழ்ன்றெனக் கருதியதற்கு இனமாகிய பிறிதாவது ஊழல்லது ஒன்று என்பது.

15