மாற்றம் .......... இயம்பல் = மாற்றம் முதலாகிய பதினாறும் , சொல் = சொல் என்னும் ஒருகுணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாம் . " கோவலர்வாய் மாற்ற முணர்ந்து ; " " இரு பிறப்பாளர் பொழுதறிந்து நுவல ; " " தெருண்டாரவை செப்பலுற்றேன்." "உரைப்பா ருரைப்பவை யெல்லாம்;" "அறங்கரைநாவி னான்மறை முற்றிய;" "அஞ்சொற் பெரும்பணைத்தோ ளாயிழையா டானொடியும்;" "நசையுநர்க் கடையா நன்பெருவாயி-லிசை ஏனப் புக்கு;" "உற்றது நாங்கள் கூற வுணர்ந்தனை;" "புகன்ற வன்றியும் பூமி கவருமே;" "காமஞ் செப்பாதுகண்டது மொழிமோ ," "கிளந்த கிளைமுத லுற்ற;" "மெய்ம்மூவாறென விளம்பினர்புலவர் ," "அச்சுதனடிதொழு தறைகுவன் சொல்லே ," "ஒருவன் செய்ந்நன்றி கொன்றார்க் - குய்தியில்லென வறம் பாடின்றே;" "வார்த்தை பகர்குற்றேன் ," "இடிபோல வியம்பினானே" என்ன முறையே காண்க. 17
|