இடையியல்

முன்னிலை அசைச்சொல்

 
440மியாயிக மோமதி யத்தை யித்தை
வாழிய மாளவீ யாழமுன் னிலையசை.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
மியா.......யாழ = மியா , இக , மோ , மதி , அத்தை , இத்தை , வாழிய , மாள , ஈ , யாழ என்னும் பத்து இடைச்சொற்களும், முன்னிலை அசை = முன்னிலை இடத்து வரும் அசைச் சொற்களாம்.

மியா --- " சிலையன் செழுந்தழையன் சென்மியா வென்று
மலையகலான் வாடி வரும். "

இக --- " தண்டுறையூர காணிக வெனவே. "

மோ --- " காமஞ் செப்பாது கண்டது மொழிமோ "

மதி --- " சென்மதி பெரும. "

அத்தை --- " சொல்லிய ரத்தைநின் வெகுளி. "

இச்தை --- " வேய்நரல் விடரக நீயொன்று பாடித்தை. "

வாழிய --- " காணிய வாவா ழியமலைச் சாரல். "

மாள --- " சிறிது -- தவிர்ந்தீக மாளநின் பரிசில ருய்ம்மார். "

ஈ --- " சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே. "

யாழ ---- " நீயே - செய்வினை மருங்கிற் செல வயர்ந் தியாழ. "

21