மீன் - மீன் என்னும் மொழி இறுதி னகரம் , வேற்றுமை வழி - வேற்றுமைக்கண் வல்லெழுத்து வரின் , றவ்வொடு பொரூஉம் - றகரத்தோடு உறழ்ந்து வரும் . மீன் + கண் = மீற்கண் , செவி , தலை , புறம் என வரும் . 'றவ்வொடு பொரூஉம் வேற்றுமை வழி ' என்றது "ணனவல்லினம் வரட்டறவும் " என எய்தியது ஒருவாற்றால் விலக்கல் .
|