பெயரியல்

பெயர்ச்சொல்
இருதிணைப் பொதுப்பெயர்

 
282முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்குஞ்
சினைமுதற் பெயரொரு நான்குமுறை யிரண்டுந்
தன்மை நான்கு முன்னிலை யைந்தும்
எல்லாந் தாந்தா னின்னன பொதுப்பெயர்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முதற்பெயர் நான்கும் = முதல் பெயராகிய நான்கு பெயரும், சினைப்பெயர் நான்கும் = சினைப்பெயராகிய நான்கு பெயரும், சினைமுதற் பெயர் ஒரு நான்கும் = சினை முதல்பெயராகிய நான்கு பெயரும், முறை இரண்டும் - முறைப் பெயராகிய இரண்டு பெயரும், தன்மைப்(பெயர்) நான்கும் = தன்மைப் பெயராகிய நான்கு பெயரும், முன்னிலைப் (பெயர்) ஐந்தும் = முன்னிலைப் பெயராகிய ஐந்துபெயரும், எல்லாம் தாம் தான் = எல்லாம் தாம் தான் என்னும் மூன்று பெயரும், இன்னன = இவை போல்வன பிறவும், பொதுப் பெயர் = இருதிணைக்கும் பொதுப்பெயர்களாகும்.

இன்னன என்றமையால், சூரியன் உதித்தான், சூரியன் உதித்தது; சந்திரன் உதித்தான், சந்திரன் உதித்தது என ஒருபொருளையே உயர்திணைப் பொருளாக்கியும் அஃறிணைப் பொருளாக்கியும் கூறும் பொதுப்பெயர் முதலானவையும்; ஊமை வந்தான், ஊமை வந்தாள் என உயர்திணை இருபாலையும் உணர்த்தும் பொதுப்பெயர் முதலானவையும் தன்மை முன்னிலை வினையாலணையும் பெயர்களும், பிறவும் கொள்க.

25