முன்னிலை முன்னர் = முன்னிலை ஏவல் முற்றென முன் சொல்லப்பட்டவற்றிற்கு முன் ,ஈயும்ஏயும் = ஈகாரமும் ஏகாரமும, அந்நிலை மரபின் மெய் ஊர்ந்துவரும் = அவ் இடத்து நிற்றற்கு உரிய மரபினை உடைய யாதானும் ஒரு மெய்யை ஊர்ந்து வரும். " சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே." எனவும் , "அட்டிலோலை தொட்டனை நின்மே" எனவும் வரும். இவ் ஈகார ஏகாரங்கள் விகுதிகள் அல்ல; ஆய்விகுதி குறைந்த ஏவலில் வரும் முன்னிலை அசையாம். இங்கே, ஈயும் ஏயும் முறையே றகர ஒற்றையும் மகர ஒற்றையும் ஊர்ந்து வந்தன. றகர ஒற்றும் மகர ஒற்றும் எழுத்துப் பேறு. 17
|