பொதுவியல்

தொகாநிலைத் தொடர்மொழி
தொகாநிலைத் தொடர்மொழி

 
374முற்றீ ரெச்ச மெழுவாய் விளிப்பொருள்
ஆறுரு பிடையுரி யடுக்கிவை தொகாநிலை.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முற்று ஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள் = வினைமுற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் எழுவாயும் விளியும் ஆகிய ஐவகைப் பொருள்களிலே பெயர் வினைகள் புணரும் புணர்ச்சியும், ஆறு உருபு = வேற்றுமைப் பொருள்களில் அவற்றின் உருபுகளாகிய இரண்டாவது முதலிய ஆறு உருபுகளும் இடையே விரிந்து நிற்கப் பெயர் வினைகள் புணரும் புணர்ச்சியும் , இடை உரி = இடைச்சொல் புணர்ச்சியும் உரிச்சொல் புணர்ச்சியும்; அடுக்கு = ஒருசொல் அடுக்கி வரும் புணர்ச்சியும் ஆகிய; இவை தொகா நிலை = இவ் ஒன்பதும் தொகாநிலைத் தொடர்மொழிகளாம்.

1. உண்டான் சாத்தன்
குழையன் கொற்றன
வினைமுற்றுத்தொடர்
2. உண்ட சாத்தன்
கரிய சாத்தன
பெயரொச்சத் தொடர்.
3. உண்டுவந்தான்
உழுதன்றியுண்ணான்
வினையெச்சத்தொடர்.

4. சாத்தன் வந்தான்........ எழுவாய்த்தொடர்.

5. சாத்தா வா................. விளித்தொடர்.

6. குடத்தை வனைந்தான
வாளால் வெட்டினான்
இரப்போர்க்கீந்தான்
மலையினிழிந்தான்
சாத்தனது கை
மலையின்கண் ஒளி
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

7. மற்றொன்று.............. இடைச்சொல் தொடர்.

8. நனிபேதையே.......... உரிச்சொல் தொடர்.

9. பாம்பு பாம்பு........... அடுக்குத் தொடர்.

வேற்றுமைத் தொகை விரிந்த இடத்து வேற்றுமைத் தொகாநிலைத் தொடராம்.வேற்றுமை உருபும் பொருளும் உடன் ஒக்கதொகை விரிந்த இடத்து, முன்னது வேற்றுமைத் தொகாநிலைத் தொடரும், பின்னது. பெயரெச்சத் தொகாநிலைத் தொடரும் ஆம்.வினைத்தொகை விரிந்த இடத்துப் பெயரெச்சத் தொகாநிலைத் தொடராம்.பண்புத்தொகையும் உம்மைத்தொகையும் விரிந்த இடத்து இடைச்சொல் தொடராம்.உவமத்தொகை விரிந்த இடத்து, முன்னது இடைச்சொல் தொடரும் , பின்னது இடைச்சொல் அடியாகப் பிறந்த பெயரெச்ச வினையெச்சத் தொடருமாம்.அன்மொழித்தொகை விரிந்த இடத்து வேற்றுமைத் தொகாநிலைத்தொடர் முதல் ஏற்பனவாம்.

23