முக்காலத்தினும் ஒத்து இயல் பொருளை = தந்தொழில் இடையறாமல் மூன்று காலங்களிலும் ஒரு தன்மையை உடையனவாய் நிகழும் பொருள்களை, நிகழும் காலத்தான் செப்புவர் = நிகழ்காலத்தினால் சொல்லுவர் புலவர். மலைநிற்கின்றது , தெய்வம் இருக்கின்றது , கடவுள் அளிக்கின்றார் என வரும். மலைக்கு நிற்றலும், தெய்வத்திற்கு இருத்தலும், கடவுட்கு அளித்தலும் முக்காலத்தினும் உள்ளன ஆதல் காண்க. 32
|