உரியியல்

ஈரறிவு உயிர்

 
446முரணந் தாதிநா வறிவொடீ ரறிவுயிர்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முரள் நந்து ஆதி = இப்பியும் சங்கும், முதலியவை , நா அறிவொடு ஈரறிவு உயிர் = கீழ்ப்போன மெய்யறிவே அன்றி நாவால் இரதத்தை அறியும் அறிவோடு ஈர் அறிவு உயிர்களாம் .
5