உரியியல்

ஒரு குணம் தழுவிய உரிச்சொல்

 
459முழக்கிரட் டொலிகலி யிசைதுவை பிளிறிரை
இரக்கழுங் கியம்ப லிமிழ்குளி றதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவ மார்ப்போ டின்னன வோசை.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
முழக்கு ....... ஆர்ப்போடு = குழக்கு முதலாகிய இருபத்திரண்டும் , இன்னன = இவை போல்வன பிறவும் , ஓசை = ஓசை என்னும் ஒருகுணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாகும்.

"முழங்கு, முந்நீர் முழுவதும் வளைஇ;" "குடிஞையிரட்டுங் கோடுயர் நெடுவரை;" "ஒல்லென வொலிக்கு மொலிபுன லூரற்கு;" "கலிகெழு மூதூர்;" "பறையிசை யருவி;" "பல்லியந்துவைப்ப;" "பிளிறுவார் முரசம்;" "இரைக்கு மஞ்சிறைப் பறவைகள்;" "இரங்கு முரசினம்;" "இரும்பிழிமாரி யழுங்கின மூதூர்;" "காலை முரசம தியம்ப;" "இமிழ்கடல் வளைஇய;" "குளிறு முரசங்குணில்பாய;" "களிறு களித்ததிருங் கார்;" "குரைபுனற் கன்னி;" "கனை கடற் சேர்ப்ப;" "சிலைத்தார் முரசங் கறங்க;" "தள்ளாத சும்மை மிகு தக்கின நாடுநண்ணி;" "கொளவை நீர்வேலி;" "வினைக் கம்பலை மனைச் சிலம்பவும்;" "அறைகட லரவத்தானை;" "ஆர்த்த பல்லியக்குழாம்" என முறையே காண்க.

18