|
| உரியியல் உயிர்ப்பொருள் | | 444 | மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின் ஒன்றுமுத லாக்கீழ்க் கொண்டுமே லுணர்தலின் ஓரறி வாதியா வுயிரைந் தாகும். | | ஆறுமுகநாவலர் காண்டிகையுரை | | மெய் நா மூக்கு நாட்டம் செவிகளின் = மெய்யும் நாவும் நாசியும் கண்ணும் காதும் ஆகிய ஐம்பொறிகளாலும் , ஒன்று முதலா = மெய்யால் பரிசத்தை உணரும் உணர்ச்சி ஒன்று முதலாக , கீழ்க்கொண்டு - கீழ்ப்போன உணர்ச்சியும் கொண்டு , மேல் உணர்தலின் = இரதம் , கந்தம் ,உருவம் , சத்தம் என மேல்வரும் புலன்களை ஒன்றோடு ஒன்றாக உணர்தலின் , ஓரறிவு ஆதியா ஐந்து ஆகும் = ஓர் அறிவு உயிர் முதலாக ஐந்துவகையாகும் , உயிர் =- அவ்வுயிர் . 3
|
|