மூலம்
எழுத்தியல்
பிறப்பு
முதல் எழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்பு
85
மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே.
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
மேற் பல் இதழ் உற - மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்த , வ மேவிடும் - வகரமானது பிறக்கும் .