எழுத்து - இவ்வெழுத்துக்கள் , மொழியாய்த் தொடரினும் - பதமாயினும் அப் பதம் தம்மோடும் உருபோடும் புணர்ந்தாலும்; முன் அனைத்து - முன் சொல்லப் பட்ட அப்பத்திலக்கணத்தையும் உடையனவாகும். எழுத்தென்பது சாதியொருமை ஆதலால் , அனைத்து என்னும் ஒருமையோடு முடிந்தது . எழுத்தியல் முற்றிற்று .
|