ஏற்புழி எடுத்து உடன் கூட்டுறும் அடியவும் = பொருளுக்கு ஏற்கும் இடத்து எடுத்து நீங்காது கூட்டும் அடியை உடையவையும் , யாப்பு ஈறு இடை முதல் ஆக்கினும் = யாதானும் ஓர் அடியை எடுத்து அச்செய்யுளின் இறுதி நடு முதல்களில் யாதானும் ஓரிடத்துக் கூட்டினும் , பொருள் இசை மாட்சியும் மாறா அடியவும் = பொருளோடு ஓசை மாட்சியும் ஓசை ஒழியப் பொருள் மாட்சியும் வேறுபடாத அடியை உடையவையும் ; அடிமறி = அடிமறிமாற்றுப் பொருள்கோளாம். 1."நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார் கொடுத்துத் தான் று ய் ப் பி னும் = மீண்டுங்கா லீண்டு மிடுக்குற்றுப் பற்றினு நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக கால்" என்பதனுள், கொடுத்துத்தான் றுய்ப்பினு மீண்டுங்கால்ண்டும் விடுக்கும் வினை உலந்தக்கால் இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் (இஃதறியார்) நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார் என அடிகளை எற்கும் இடத்து எடுத்துக் கூட்டுக. 2. "மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளை நெகி ழும்மே கூறாய் தோழியான் வாழுமாறே " இதனுள் எவ்வடியைஎங்கே கூட்டினும் பொருளும் ஓசையும் வேறுபடாமை காண்க.3."அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங்குற்றம் விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம் சொலற் பால வல்லாத சொல்லுதலுங் குற்றங் கொலைப்பாலுங் குற்றமேயாம்." இதனுள், ஈற்றடி ஒழிந்த மூன்றடியுள் யாதானும் ஒன்றை எடுத்து யாதானும் ஓரிடத்துக் கூட்டி உச்சரித்துப் பொருளும் ஓசையும் வேறுபடாமையும், ஈற்றடியை எடுத்து யாதானும் ஓரிடத்துக் கூட்டி உச்சரித்து ஓசை வேறுபட்டுப் பொருள் வேறுபடாமையும் காண்க. 68
|