எழுத்தியல்

இடைநிலை மயக்கம்
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்குச் சிறப்பு விதி

 
116யரழ முன்னர் மொழிமுதன் மெய்வரும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ய ர ழ முன்னர் - ய , ர , ழ என்னும் மூன்று மெய்களின் முன்; மொழி முதல் மெய் வரும் - மொழிக்கு முதலாக நின்ற பத்து மெய்களும் மயங்கும் .

வேய் கடிது , வேர் கடிது , வீழ் கடிது , சிறிது பெரிது , தீது , நீண்டது , மாண்டது , ஞான்றது , யாது , வலிது - இவற்றையும் அம் மூன்றுடன் கூட்டுக .

வேய்ங் குழல் , ஆர்ங் கோடு , பாழ்ங் கிணறு
என வரும் .

சுருங்கச் சொல்லல் என்னும் அழகு பற்றி மொழிமுதல் மெய் எனக் கூறலால் , யகரத்தின் முன் யகரம் மயங்கும் உடனிலை இங்கே கொள்ளாது ஒழிக .