யகரம் வரக் குறள் உத் திரி இகரமும் - யகரத்தை முதலிலே உடைய சொல் வரக் குற்றியலுகரந் திரிந்த இகரமும் , அசைச்சொல் மியாவின் இகரமும் - அசைச் சொல்லாகிய மியா என்பதின் மகரத்தின் மேல் இருக்கிற இகரமும் , குறிய - குற்றியலிகரங்களாம் . நாகு + யாது = நாகி யாது எஃகு + யாது = எஃகி யாது வரகு + யாது = வரகி யாது கொக்கு + யாது = கொக்கி யாது குரங்கு + யாது = குரங்கி யாது தெள்கு + யாது = தெள்கியாது எனவும் ,
கேண்மியா எனவும் வரும். பொதுப்படக் கூறிய குற்றியலுகரம் முப்பத்தாறினாலும் , அசைச்சொல் மியாவினாலும் குற்றியலிகரம் முப்பத்து ஏழாதல் காண்க . *(அ.கு) குற்றியலுகரமே குற்றியலிகரமானாலும் , எழுத்து முறைமை பற்றிக் குற்றியலிகரம் முதல் கூறப்பட்டது எனக் கொள்க .
|