வினா யார் என் வினைக்குறிப்பு-வினாப் பொருளைத் தரும் யார் என்னும் வினைக்குறிப்பு முற்று , உயர்முப்பால் - உயர்திணை முப்பால்களுக்கும் பொது வினையாம். அவன் யார், அவள் யார், அவர் யார் என வரும்.
அஃதி யார் , அவை யார் எனவும், யான் யார் , யாம் யார் எனவும் , நீ யார் , நீர் யார் எனவும், அஃறிணை இருபாலிலும், மற்றை ஈரிடத்திலும் வருதல் புதியன புகுதலாம் என்க. யார் என்பது ஆரென விகாரப்பட்டும் வரும். இங்கே சொன்ன யார் என்பது, யாவர் என்னும் உயர்திணைப் பலர்பால் சொல் விகாரப்பட்ட யார் என்பது அன்று. 30
|