பொதுவியல்

பொருள்கோள்
பொருள்கோளின் பெயரும் தொகையும்

 
411யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண்
டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட்
டடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
யாற்று நீர் = யாற்றுநீர்ப் பொருள்கோளும் , மொழிமாற்று - மொழிமாற்றுப் பொருள்கோளும் நிரனிறை - நிரனிறைப் பொருள்கோளும் , விற்பூண் = விற்பூட்டுப் பொருள்கோளும் , தாப்பிசை = தாப்பிசைப் பொருள்கோளும் , அளைமறிபாப்பு = அளைமறி பாப்புப் பொருள்கோளும் , கொண்டுகூட்டு - கொண்டு கூட்டுப் பொருள்கோளும் , அடிமறிமாற்று என - அடிமறிமாற்றுப் பொருள்கோளும் என , பொருள்கோள் எட்டு = பொருள் கோள் எட்டாம்.
60