யாப்பு அடி பலவினும் கோப்பு உடை மொழிகளை = செய்யுள் அடிகள் பலவற்றினும் கோக்கப் படுதலையுடைய சொற்களை, ஏற்புழி இசைப்பது = எடுத்த பொருளுக்கு ஏற்ற இடத்துக் கூட்டும் பொருள்கோள் , கொண்டுகூட்டுப் பொருள்கோளாம். "தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி யஞ்சனத்தன்ன பசலை தணிவாமே - வங்கத்துச் சென்றார் வரின்" என வரும். இதனுள், வங்கத்துச் சென்றார் வரின் அஞ்சனத்தன்ன பைங்கூந்தலையுடையாளது மாமேனிமேல் தெங்கங்காய் போலத் திரண்டு உருண்டகோழிவெண்முட்டை உடைத்தன்ன பசலை தணிவாம் எனக் கொண்டு கூட்டுக. 67
|