இடையியல்

எல்லாஇடத்தும் வரும் அசைச்சொல்

 
441யாகா பிறபிறக் கரோபோ மாதிகுஞ்
சின்குரை யோரும் போலு மிருந்திட்
டன்றாந் தாந்தான் கின்றுநின் றசைமொழி.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
யா.......நின்று = யா , கா , பிற ,பிறக்கு ,அரோ ,போ ,மாது ,இகும் ,சின் ,குரை ,ஒரும் ,போலும் , இருந்து ,இட்டு ,அன்று ,ஆம் ,தாம் ,தான் ,கின்று ,நின்று என்னும் இருபது இடைச்சொற்களும் , அசைமொழி = எல்லா இடங்களிலும் வரும் அசைசொற்களாம்.

யா --- " யா பன்னிருவர் மாணாக்கர் அகத்தியனார்க்கு"

கா --- " புறநிழற் பட்டாளோ விவளிவட் காண்டிகா. "

பிற --- " ஆயனை யல்ல பிற." '

பிறக்கு --- " பிறக்கிதனுட் செல்லான் பெருந்தவம் பட்டான். "

அரோ --- " நோதக விருங்குயி லாலு மரோ. "

போ --- " பிரியின் வாழா தென்போ. "

மாது --- " விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவென் நஞ்சே. "

இகும் --- " காண்டிகு மல்லமோ கொண்க . "

சின் --- " தீங்கா கியவா லென்றிசின் . "

குரை --- " அது பெறலருங் குரைத்தே."

ஒரும் --- " அஞ்சுவ தோரு மறனே. "

போலும் --- " வடுவென்ற கண்ணாய் வருந்தினை போலும். "

இருந்து - " நனவென் றெழுந்திருந்தே னல்வினையொன் றில்லேன். "

இட்டு - " நெஞ்சம் பிளந்திட்டு. "

அன்று - " பிரமாபுர மேவிய பெம்மானிவ னன்றே. "

ஆம் - " பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாந் தன்னை வியந்து. "

தாம் - நீர்தாம்.

தான் - நீ தான்.

கின்று - " வாழ்வா னாசைப்பட் டிருக்கின்றேன். "

நின்று - " அழலடைந்த மன்றத் தரந்தையராய் நின்றார்
நிழலடைந்தே நின்னையென் றேத்த ."

22
இடையியல் முற்றிற்று