எழுத்தியல்

இடைநிலை மயக்கம்
உடனிலை மெய்ம்மயக்கத்தின் சிறப்பு விதி

 
118ரழவல்லன தம்முற் றாமுட னிலையும்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
ர ழ அல்லன தம் முன் தாம் உடன் நிலையும் - ரகர ழகரம் அல்லாத பதினாறு மெய்களும் தமக்கு முன் தாம் உடனின்று மயங்கும் .

அக்கம் , அங்ஙனம் , அச்சம் , அஞ்ஞானம் ,
அட்டு , அண்ணம் , அத்து , அந்நீர் , அப்பு ,
அம்மை , அய்யம் , அல்லி , அவ்வை , அள்ளல் ,
அற்றம் , அன்னை

என வரும் .