ரவ்விற்கு அம்முதல் ஆம் முக் குறிலும்-ரகத்திற்கு அ, இ, உ என்றும் மூன்று குற்றெழுத்துக்களில் ஒன்றும், லவ்விற்கு இம்முதல் இரண்டும் - லகரத்திற்கு இ, உ என்னும் இரண்டில் ஒன்றும் , யவ்விற்கு இய்யும் - யகரத்திற்கு இகரமும் , மொழி முதல் ஆகி முன் வரும் - அவ் எழுத்துக்களை முதலிலுடைய வடமொழிகளுக்கு முதலாகி அம்மூன்று எழுத்துக்களுக்கும் முன்னே வரும். அரங்கம், இராமன், உரோமம் ,எனவும் , இலாபம், உலோபம் எனவும், இயக்கன் எனவும் வரும் .
|